தாயை இழந்த கர்ப்பிணி பெண்…தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்திய சக ஊழியர்கள்: அரசு அலுவலகத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

Author: Rajesh
17 March 2022, 12:55 pm
Quick Share

கோவை: அன்னூரில் தாயை இழந்த வட்டார வளர்ச்சி இளநிலை உதவியாளர் பெண் ஒருவருக்கு அலுவலக ஊழியர்களே தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் குனவதி. ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அன்னூரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் குனவதி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியான நிலையில் இவரது தாயை அண்மையில் காலமாகிவிட்டார்.

இதனால் இவருக்கு தாய் இல்லாமல் வளைகாப்பு நடக்குமா என மனச்சோர்வுடன் இருந்த குனவதிக்கு அவரது மன வலியை போக்கும் வகையில் அவருடன் பணியாற்று சக ஊழியர்கள் ஒருங்கிணைந்து இன்று அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்தி அசத்தினர்.

அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி குணவதிக்கு சக ஊழியர்கள் வளையல் போட்டு,பொட்டு,பூ வைத்து ஆரத்தி எடுத்து தாய் ஸ்தானத்தில் இருந்து இந்த வளைகாப்பு நடத்தினர். இதனால் மனம் மகிழ்ந்து ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கர்ப்பிணி குனவதி நன்றி தெரிவித்து கொண்டார். இந்த சம்பவம் அணைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Views: - 880

0

0