“அம்மா, ஆன்லைன் வகுப்பு புரியல“ : தாய் சமாதானம் செய்தும் விபரீத முடிவு எடுத்த மாணவி!!

21 September 2020, 11:24 am
College Student Suicide - updatenews360
Quick Share

சென்னை : ஆன்லைன் வகுப்பு பாடம் புரியாததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் அடுத்த அருமந்தை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கிரி என்பவரது 18 வயது மகள் தர்ஷினி. அண்மையில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு சேர்ந்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று மாலை மாணவி தர்ஷினி ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாடங்கள் தமக்கு புரியவில்லை என தமது தாயிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் புரியவில்லை என்றாலும், போகப் போக புரியம், பார்த்து கொள்ளலாம் என தாய் கூறியுள்ளார்.

எனினும் சமாதானம் அடையாத மாணவி தர்ஷினி வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சந்தேகமடைந்த தாய் சென்று பார்த்த போது தூக்கிட்ட நிலையில் இருந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி தர்ஷினி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் புரியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0