பைக் வாங்கி தராததால் விரக்தி… கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை : மதுரையில் சோகம்…!!!
Author: Babu Lakshmanan11 October 2021, 8:54 pm
மதுரையில் பெற்றோர் பைக் வாங்கி தராத விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தென்றல்நகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி. இவரது மகனான மகேந்திரன் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவர் மகேந்திரன் தனது பெற்றோரிடம் பைக் வாங்கி தருமாறு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரது தாய் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த கல்லூரி மாணவர் மகேந்திரன் வீட்டில் தனது அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் இறந்த வாலிபரின் உடலை மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர்.
0
0