கல்லூரிகளை திறப்பது குறித்து 12ம் தேதி முடிவு : அமைச்சர் கேபி அன்பழகன்..!!

9 November 2020, 1:28 pm
kp anbalagan- updatenews360
Quick Share

சென்னை : அரசு அறிவித்ததைப் போல நவ.,16ம் தேதி முதல் கல்லூரிகளை திறப்பது குறித்து வரும் 12ம் தேதி முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு நவ.,30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி, பள்ளிகள் (9,10,11 மற்றும் 12ம் வகுப்பு) கல்லூரிகள் வரும் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் கட்டுக்குள் வந்தாலும், தற்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க சரியான நேரம் அல்ல என கல்வியாளர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அனைத்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்கப்படும் என அறிவித்தது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி நவ.,16ம் தேதி முதல் கல்லூரிகளை திறப்பது குறித்து வரும் 12ம் தேதி முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார்.

இன்று நடந்த கருத்துக் கேட்பு நிகழ்ச்சியில், பருவமழைக்கு பிறகு பள்ளிகளை திறந்தால் போதும் என ஒரு சில பெற்றோரும், சிலர் குழந்தைகளின் படிப்பு வீணாவதால் உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 0

0

0