பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த சமுதாய நலக்கூடம்: ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

12 September 2020, 4:51 pm
Quick Share

கோவை: பூலுவபட்டி பேரூராட்சிக்குட்பட்ட வடிவேலாம்பாளையம் பகுதியில் சமுதாய நலகூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவங்கி வைத்தார்.

அங்கு உள்ள பொது மக்களுக்கு நோய் கபசுற குடிநீர் 50 கிராம் பாக்கெட் மல்டி வைட்டமின் மாத்திரை 40 சிங் மாத்திரை 40 ஆர்சானிக் ஆல்பம் 1 குப்பி ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு பெட்டகம்வழங்கப்பட்டது.குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி பொதுமக்களிடம் கூறும் பொழுது, குழந்தைகள் பெரியவர்கள் அனாவசியமாக வெளியே வரவேண்டாம்,

அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் மருத்துவர்கள் ஆலோசனை படியும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும், கபசுரக் குடிநீர் மற்றும் முட்டை ரசம் உள்ளிட்ட உணவு வகைகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 0

0

0