தமிழகத்தில் தமிழிசைக்கு என்ன வேலை…? தமிழ்நாட்டுக்குள்அவர் நுழையவேக் கூடாது.. EVKS இளங்கோவன் கடும் எதிர்ப்பு

Author: Babu Lakshmanan
18 December 2023, 5:04 pm
Quick Share

ஆளுநர் தழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மட்டும் அவர்களது வேலையை பார்க்க வேண்டும் என்றும், அதனை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்குள் நுழைய கூடாது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் மக்களுடன்  முதல்வர் திட்டத்தின் துவக்க விழாவானது ஈரோடு பவானி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும்,  சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது :- தமிழிசை செளந்திரராஜன் தெலுங்கானாவிற்கு கவர்னராக இருக்கின்றார், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியினர் முதல்வராக பதவியேற்ற போது, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, கார்கே இருந்தார்கள். மரியாதைக்கு கூட தமிழிசை வணக்கம் வைக்கவில்லை.

குறைந்தபட்சம் வயதிற்கு ஆவது மரியாதை செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. தமிழ்நாட்டில் தமிழிசைக்கு என்ன வேலை என்று தெரியவில்லை. சம்பந்தம் இல்லாமல் ஆஜராகி வருகிறார். அவர் தெலுங்கானா, பாண்டிசேரியில் வேலை பார்த்து கொண்டு போக வேண்டுமே தவிர, தமிழகத்தில் நுழைய கூடாது.

சென்னையில் 38 வருடத்திற்கு பிறகு வரலாறு காணாத மழை பெய்து உள்ளன. பொதுவாக வெள்ளம் வந்தால் சென்னையில் சில பகுதியில் வரும். ஆனால் இந்த மழையால் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளன. பக்கத்தில் உள்ள மாவட்டம் பாதிக்கப்பட்டு உள்ளன. உடல் நிலை சரியில்லை என்றாலும் கூட தமிழக முதல்வர் நேரடியாக சென்று ஆறுதல் சொல்லி உள்ளார். நிவாரணங்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் தொடங்கி வைத்தார். போன முறை வெள்ளம் வந்த போது, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நேரில் யாரையும் சந்திக்கவில்லை. காரில் சென்று பார்த்து விட்டு வந்து விட்டார். செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க வேண்டும் என அதிகாரிகள் சொன்னால் கூட, அவர் தூங்கி கொண்டு இருந்த காரணத்தால், இரண்டு மூன்று நாட்கள் திறக்காமல் ஒரேயடியாக திறந்த காரணத்தால், மிக பெரிய உயிர் சேதம் ஏற்பட்டன. இப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளன, எனக் கூறினார்.

Views: - 234

0

0