அரசியல் ஒரு முழு நேர ஓட்டப்பந்தயம்… ராகுலை நினைவுபடுத்தி முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த காங்., எம்பி ஜோதிமணி..!!

Author: Babu Lakshmanan
2 July 2022, 6:04 pm
Quick Share

அரசியல் ஒரு முழு நேர ஓட்டப்பந்தயம் என்று ராகுல் காந்தி ஜி சொன்னதை நினைவு கூர்ந்து , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கரூர் காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணி புகழ்ந்து பேசினார்.

கரூர் மாநகருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொருட்டு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வந்திருந்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மொத்தம் ரூ 581.44 கோடி மதிப்பீட்டில் 99 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், 28.60 கோடி மதிப்பீட்டில் 95 முடிவுற்ற பணிகளுகளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளின் சார்பில் 500.83 கோடி மதிப்பீட்டில் 80,750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முன்னதாக, கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கரூர் மாநகருக்கு முதல்வரான பின்னர் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணனை வரவேற்கின்றேன் என்றும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம், மக்கள் வெள்ளம் சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்து வருவதையும் நினைவு கூர்ந்தார்.

அதுமட்டுமில்லாமல், குதிரை பேரத்தின் மூலம், நான் ஆட்சிக்கு வரமாட்டேன், மக்களின் அன்பு பெற்று முதல்வராவேன் என்று அன்று கூறியது எங்களுக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. பதவி வரும் போது பண்பு வரவேண்டும் என்று சொல்வார்கள். அதுபோல, பதவியிலும், நல்ல பணிவும் இருக்கும் நல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று புகழ்ந்து தள்ளினார்.

முதல்வர் ஆவதற்கு முன்னர் எப்படி இருந்தீர்களோ, அப்படியே தான் முதல்வர் ஆன பின்னரும் உள்ளீர்கள் என்றும், ஒரு பணிவோடும், அசூர முனைப்போடும் செயல்படுவது தமிழக மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம், அதே போல், தலைவர் ராகுல்காந்தி அடிக்கடி சொல்வார்கள். அரசியல் ஒரு நீண்ட நாள் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ரேஸ் கிடையாது, உண்மையான அன்பும், மக்களுக்கான அரசும், இந்த அரசு மட்டும் தான்.

ஆகையால், பெண்கள் பொதுவாழ்விலும், போராட்டத்திலும் உள்ளார்கள். ஆனால் பெண்களுக்கு மட்டுமே இந்த அரசு என்று நடத்தி வருவதற்காக கரூர் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினராக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். ஆகையால் நீங்கள் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

கரூர் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கல்லூரிகளையும் கொடுத்துள்ளீர்கள் அதற்காக நன்றியினையும் தெரிவித்து கொண்டார். மேலும், பெரியதாதம்பாளையம் ஏரியினை தூர்வாரி அதில் நீரினை ஏற்றி நீர்வளத்தினை பெருக்க இந்த அரசு எடுக்க வேண்டுமென்றும், இந்தியாவின் நான்காவது ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. ஆகையால், கரூருக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையை உருவாக்க முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

Views: - 556

0

0