சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்…. வதந்திகளை நம்பாதீர்கள் : காங்., எம்பி விஜய் வசந்த் வேண்டுகோள்..!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 1:04 pm
vijay vasanth - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்தின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்ட நிலையில், வதந்திகளை பரப்பினால் யாரும் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்தின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டதையடுத்து, வலைதளங்களில் தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

குமரி மாவட்ட எம்பி விஜய் வசந்த் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது :- குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதியில் கடந்த ஒரு வாரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கி நான் உதவிகள் செய்து வந்திருந்த நிலையில்,நேற்றிரவு என்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களை சமூகவிரோதிகள் முடக்கியுள்ளனர்.

மேலும், அந்த வலைதள பக்கங்களை பயன்படுத்தி யாரேனும் தவறான தகவலை பரப்பினால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Views: - 718

0

0