மதங்களுக்கு எதிராக பேசி வந்த சர்ச்சை சாமியார் சிவகுமார் மீண்டும் கைது..

Author: kavin kumar
1 October 2021, 4:22 pm
Quick Share

திருச்சி: சென்னையில் மதங்களுக்கு எதிராக பேசி வந்த சர்ச்சை சாமியார் சிவக்குமார் திருச்சி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவரும் சர்ச்சை சாமியார் சிவக்குமார், பல்வேறு மதங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஜாதிகள் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் எங்களையும், நாங்கள் பின்பற்றும் மெய்வழி மதத்தையும், எங்கள் குலதெய்வத்தையும் அவமதித்து, மதவுணர்வுகள் கடுமையாக புண்படும்படி தகாத வார்த்தை கூறி தொடர்ச்சியாக இருபதுக்கும் மேற்ப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். மேலும் அனைத்து மத கடவுளர்களையும் அவமதித்தது, பெண்களை ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 26.7.2021 அன்று திருச்சி மாநகர கமிஷனர் அருணிடம் யோக குடில் சிவக்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு 6.8.2021 அன்று குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சிவக்குமார் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இன்று திருச்சி குற்றவியல் நடுவர் எண்4 முன்பாக நீதிமன்றத்தில் நீதிபதி குமாரின் முன்பு சென்னை புழல் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டுஆஜர்படுத்தப்பட்டார். இதை தொடர்ந்து சர்ச்சை சாமியார் சிவக்குமாரின் குற்றச் செயல்களுக்காக அவரை 13ம் தேதி வரை இவ்வழக்கில் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை மீண்டும் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Views: - 365

0

0