தமிழகத்தில் இன்று 1,575 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
4 September 2021, 8:56 pm
Cbe Corona -Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 575 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1568 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 1575 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 1575 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற விவரம் அளிக்கப்படவில்லை. ஆக மொத்தம் 1575 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 21 ஆயிரத்து 086 ஆக உயர்ந்துள்ளது. 

Views: - 211

0

0