கோவையை உலுக்கும் கொரோனா… 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று : 24 ஆயிரம் பேருக்கு சிகிச்சை….

Author: kavin kumar
24 January 2022, 8:48 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் 24 ஆயிரத்து 792 பேர் தற்போது நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவல் விகிதம் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுபவர்களை விட அதிகமாகவே உள்ளது. தற்போது கோவையில் 24 ஆயிரத்து 792 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக அளவில் பாதிப்பு இருந்தாலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 90 சதவீதம் பேரை வீட்டுத் தனிமையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள சுகாதாரத்துறை அனுமதி வழங்கி வருகிறது. எனவே மருத்துவமனைகளில் 11 சதவீத கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

இன்று மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி, வெளியாகியுள்ளது, அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 786 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்தார். தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 2142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 91ஆயிரத்து 412 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2546 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1914

0

0