நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணி: வரும் 14ம் தேதி முதலமைச்சர் ஆய்வு..!!!

Author: Aarthi
10 October 2020, 4:36 pm
kkumari officee - updatenews360
Quick Share

நாகர்கோவில்: வருகிற 14ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கும் கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 14 ம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணி உள்பட பல்வேறு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், பல்வேறு வளர்ச்சி பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். முதலமைச்சர் வருகையை ஒட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் புனரமைக்கப்பட்டு வருகிறது. ஆய்வுக் கூட்டம் நடைபெறும் அரங்கத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் போன்றவற்றுடன் சோதனை மோற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 46

0

0