கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார்: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

Author: Udayaraman
4 August 2021, 6:53 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது மூன்றாவது அலையால் இல்லை என்றும், எத்தனை அலை வந்தாலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரியில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக துணைநிலை ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற தாய்பால் வார நிகழ்வில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்ப்பால் குறித்த முக்கியதுவதை அனைவருக்கும் எடுத்துரைத்தார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தாய்ப்பால் நிச்சயமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும், எவ்வளவு சொன்னாலும் மக்களிடம் முழுமையான விழிப்புணர்வு இல்லை இதனால் தாய்பால் கொடுப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார், மேலும் புதுச்சேரி ராஜிவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தாய் பால் வங்கிக்கு பாராட்டு தெரிவித்த அவர்,

விரைவில் நடமாடும் தாய் பால் வங்கி ஆரம்பிக்க அரசு சார்பில் ஏர்ப்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார், தாய்மார்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட தமிழிசை, புதுச்சேரியில் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது மூன்றாவது அலையால் இல்லை என்றும், எத்தனை அலை வந்தாலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரியில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்,

தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உடனடியாக மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் கன்னாகிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் போதுமான அளவு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார், எத்தனை அலைகள் வந்தாலும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கலாம் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

Views: - 421

0

0