அமலுக்கு வந்த ஊரடங்கு : பின்னலாடை நிறுவனங்களுக்கு முறையான அறிவிப்பு இல்லாததால் குழப்பம்!!

10 May 2021, 10:46 am
Tirupur Curfew -Updatenews360
Quick Share

திருப்பூர் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு திருப்பூரில் அமலுக்கு வந்தது .திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்குவதில் முறையான அறிவிப்பு வெளியிடாததால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு இன்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்த உத்தரவு வெளியிட்டிருந்தது. இருப்பினும் இதில் மளிகை கடைகள் , பேக்கரி , உணவுகங்கள் செயல்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இதனால் அரசு தனியார் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்காதவாறு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வந்தாலும் கூட திருப்பூரில் பல்லாயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு முகக்கவசம் , முழு கவச உடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து இருக்கும் சூழ்நிலையில் மற்ற பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்படுவதில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு வெளியீடாததால் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது .

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பாக பின்னலாடை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் வகையில் பின்னலாடை நிறுவனங்களே பணியாளர்களுக்கான வாகனத்தை ஏற்பாடு செய்து சமூக இடைவெளி உடன் அழைத்து வர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாததால் தொழிலாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Views: - 104

0

0