மருத்துவமனையில் பிறந்து மயானத்தில் உயிர் பிழைத்த குழந்தை : மீண்டும் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!

5 July 2021, 3:41 pm
Baby Dead - Updatenews360
Quick Share

தேனி : தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்ததாக சான்றழிக்கப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த குழந்தை இன்று உயிரிழந்தது.

தேனி பெரியகுளத்தை சேர்ந்த மேரி என்ற பெண்ணுக்கு குறை பிரசவத்தில் 6 மாதத்திலேயே குழந்தை பிறந்தது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இறந்துவிட்டதாகக் கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை புதைப்பதற்காக மயானத்திற்கு கொண்டு செல்லும்போது குழந்தை உயிருடன் இருந்ததால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை இறந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் குழந்தையை இறந்ததாகக் கூறிய விவகாரம் தொடர்பாக துறை தலைவர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அப்போது பணியில் இருந்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. துறைத் தலைவரின் விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் கூறியுள்ளார்.

பெண் குழந்தை இன்று உயிரிழந்த நிலையில் மருத்துவ நடைமுறைகளுக்கு பின் தற்போது குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Views: - 179

0

0