‘பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்’: ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய SRMU ஊழியர்கள்..!!

Author: Rajesh
14 March 2022, 12:50 pm
Quick Share

கோவை கூட்செட் ரோட்டில் உள்ள புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த கோரி SRMU ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பென்சன் திட்டத்தில் 2004 ற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் இல்லை என்று அறிவிக்கபட்டுள்ளதால் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த கோரி இன்று SRMU/AIRF சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை குட்செட் சாலையில் உள்ள கோவை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யு/ எ.ஐ.ஆர்.எஃப் ஊழியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே நடைமுறை படுத்த கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் பி.எப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Views: - 733

0

0