நடுநிசியில் நடந்த வேட்டை : DGP சைலேந்திரபாபுவின் SILENT OPERATION.. நடுநடுங்கிப் போன ரவுடிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 6:20 pm
Sylendra Babu Operation - Updatenews360
Quick Share

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல், நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் பழிக்கு பழிவாங்குதல், கும்பல் மோதல் பல்வேறு ரவுடிசம்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் ரவுடிகளின் அராஜகத்தை ஒழிக்கவும், குற்றங்களைத் தடுக்கும் விதமாக ரவுடிகளிடம் நள்ளிரவில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரடிகளின் அராஜகத்தை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் நேற்று ஒரே இரவில் ரகசியமாக அதிரடி நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் போட்ட ஸ்கெட்ச்தான் STORMING ஆப்ரேஷன்.

ரவுடிகளின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்து அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை லிஸ்ட் எடுத்து, அவர்களின் வீடுகளில் புகுந்து சோதனை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ரவுடிகளின் வீடுகளில் அதிரடியாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்த இந்த சோதனையில், ரவுடிகளின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

அதேபோல், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 37 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் 560 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கைதான ரவுடிகளிடமிருந்து 256 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 700 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டதோடு கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Views: - 360

0

0