அம்மா உணவக பெண் ஊழியர்கள் திடீர் பணியில் இருந்து நீக்கம் : சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு..!!

Author: Babu
31 July 2021, 7:32 pm
amma unavagam Ladies protest - updatenews360
Quick Share

திண்டுக்கல் மாநகராட்சி மேற்பார்வையில் உள்ள அம்மா உணவகங்களில் பணியாற்றி வந்த பெண்களை திடீரென வேலையில் இருந்து நிறுத்தியதால் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏழை, எளிய மக்கள் பசியாரக் கூடிய வகையில், அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. இங்கு ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 3 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் மற்றும் சாலையோரம் சுற்றித் திரியக் கூடிய ஆதரவற்ற நபர்கள் பலரும் தங்கள் அன்றாட பசியைப் போக்கி வந்தனர்.

கொரோனா ஊரடங்கின் போது அம்மா உணவகம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது திண்டுக்கலில் அரசு மருத்துவமனை, மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றக்கூடிய 24 பெண் ஊழியர்களை இன்று திடீரென எந்த முன் அறிவிப்பும் இன்றி வேலையை விட்டு நிறுத்தியதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா உணவக பெண் பணியாளர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த நகர் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று பிரச்சனையை தெரிவிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் திண்டுக்கல் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 200

0

0