இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 4 பேர் பலி.. விபத்து நடந்த பகுதியில் நிகழ்ந்த மற்றொரு விபத்து.. !!

Author: Babu Lakshmanan
29 May 2023, 6:35 pm
Quick Share

ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் கொல்லப்பட்டி அருகே பாளையம் பகுதி சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவருடைய நண்பர் அதே ஊரைச் சேர்ந்த சேகர் ஆகியோர் இருவரும் ஒரு டூவீலரில் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி சென்றுள்ளனர்.

அதேபோல், ரெட்டியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவருடன் உடன் வேலை செய்யும் தென்னம்பட்டி சேர்ந்த துரைராஜ் என்பவரும் ஆகிய இருவரும் ஒரு டூவீலரில் வேடசந்தூர் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ரத்தினம், சேகர் சுதாகர் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

துரைராஜ் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில், அங்கு இருந்த நிலையில், அங்கு விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து ஒரு லாரி சென்று அருகில் நின்றுள்ளது. இந்நிலையில் சீத்த மரம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற தனியார் வங்கியில் வேலை செய்யும் வாலிபர் ஒரு ஸ்கூட்டியில் சென்றுள்ளார். விபத்து நடந்தது தெரியாமல் நின்றிருந்த லாரி மீது மோதி அவரும் படுகாயம் அடைந்துள்ளார்.

காயமடைந்த பிரவின் குமார் மற்றும் துரைராஜ் ஆக இருவரும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி துரைராஜ் என்பவர் உயிரிழந்தார். தனியாக ஸ்கூட்டியில் வந்த பிரவீன் குமார் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இருசக்கர வாகனங்கள் இரண்டு மோதி கொண்டதில் நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 150

0

0