சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை.. சீலை உடைத்து மதுப்பாட்டில்களை கடத்திய கடை ஊழியர்கள் ; பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
22 June 2023, 4:47 pm
Quick Share

அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட அரசு மதுபான கடையில் கடை ஊழியர்கள் சீலை உடைத்து மதுவை கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழகம் முழுவதும் 500 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 15 கடைகள் மூடப்படும். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ளது, குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களை பாதிக்கும் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு முற்பட்ட ரவுண்ட் ரோடு பகுதியில் 3129 அரசு மதுபான கடை செயல்படுகிறது. இந்த மதுபான கடை அருகே மூன்று பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் காவல் நிலையம், சினிமா திரையரங்குகள் மற்றும் கிராம பகுதிக்கு செல்லும் முக்கிய பகுதியாகவும் இந்த சாலை உள்ளது. இப்பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அறிவித்த மதுபான கடை மூடப்படும் என்ற அரசு அறிவித்த நிலையில், இன்று இந்த 31 29 மதுபான கடையும் பூட்டப்பட்டு அரசு அதிகாரிகளால் நள்ளிரவில் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 11 மணிக்கு மதுபான கடை ஊழியர்கள் வந்து சீலை அவர்களாக அகற்றிவிட்டு, உள்ளே இருந்த மதுபானங்களை இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் கதவை திறந்து மதுபானங்கள் கொண்டு செல்வதை யாரும் பார்த்து விடாதபடி, மதுபானங்களை கடத்தினர்.

மேலும், அருகில் யாரும் வராதபடி மதுபானம் வெளியே சென்றவுடன் கதவை மூடினர். அரசு அதிகாரிகள் சீல் வைத்து சென்றதை மதுபான ஊழியர்கள் எப்படி அகற்றுனீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று கூறி மதுபான கடையில் உள்ளே சென்று மூடிவிட்டனர்.

இதையடுத்து, பொதுமக்கள் தகவலின் பெயரில் அங்கு வந்த காவல் துறையினர் கடை ஊழியர்களிடம் கதவை திறக்கச் சொல்லி எதற்காக கதவை திறந்தீர்கள் என்று கேட்ட பொழுது, நாங்கள் ஸ்டாக் பார்க்கிறோம் என்று ஊழியர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், ‘நாங்கள் தான் சீல் வைத்தோம், நாங்களே அகற்றி உள்ளே செல்கிறோம். யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.’ என்று ஊழியர்கள் கூறியதால், இப்பகுதி மக்கள் வளர்ச்சி அடைந்தனர். மேலும், அரசு அதிகாரிகள் வைத்த சீலை ஊழியர்கள் அகற்றிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 271

0

0