ஓட்டுப்போட ஆசைஆசையாக வந்த நபர்…. அதிகாரிகள் கொடுத்த ஷாக் ; ஓட்டுப் பெட்டிகளை எடுக்க விடாமல் முற்றுகை போராட்டம்…!

Author: Babu Lakshmanan
20 April 2024, 9:40 am
Quick Share

சாணார்பட்டி அருகே ஓட்டு போட மறுத்த அதிகாரிகளை கண்டித்து ஓட்டுப் பெட்டிகளை எடுத்து விடாமல் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோணப்பட்டியில் உள்ள 142ஆவது வாக்குச்சாவடியில் நேற்று காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஊரைச் சேர்ந்த சென்னையில் வேலை செய்து வரும் வெங்கட்ராமன் என்பவர் வாக்கு செலுத்துவதற்காக கோணப்பட்டி வந்துள்ளார்.

மேலும் படிக்க: திடீரென U-TURN அடித்த தேர்தல் ஆணையம்… தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவில் திடீர் மாற்றம்..!!

அப்போது, அவருக்கு கோணப்பட்டியில் வாக்குச்சீட்டில் அவரது பெயர் இல்லாததால் வாக்கு செலுத்த முடியவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும், அவர் 142வது வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்த முடியாததால், அவருடைய நண்பர்கள் 15 பேர் அவருக்கு வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், நேற்று மாலையுடன் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, 15 பேரும் வாக்களிக்க முடியாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்பு வாக்குப்பட்டி வைத்திருக்கும் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் கைது சென்றனர். இரவு 9 மணி அளவில் வாக்குப் பெட்டிகள் காவல்துறை சார்பில் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 79

0

0

Leave a Reply