மாற்றுத்திறனாளி இளைஞர்கள் டூ தடகள வீரர்கள்… அசத்தும் தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் : மாநில சங்க தலைவர் Er.சந்திரசேகர் பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2023, 8:33 pm
Paralympic - Updatenews360
Quick Share

தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் Er.சந்திரசேகர் தலைமையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம், கிராமப்புற மாற்றுத்திறனாளி இளைஞர்களை தடகள விளையாட்டு வீரர்களாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்து வருகிறது.

பாரிஸ் நகரில் நடைபெற்ற உலக பாராலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் சுமார் இந்தியாவில் உள்ள 40 திறமையான வீரர்களை கொண்டு பங்கேற்று 17வது இடத்தை பிடித்து அசத்தியது.

தலைவர் Er.சந்திரசேகர், செயலாளர் பி. கிருபாகர ராஜா மற்றும் பாரா தடகள தலைவர் சத்தியநாராயணா ஆகியோர் பாரிஸ் நகரத்திற்கு சென்று இந்திய பாராலிம்பியன்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கினர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமத்தில் பிறந்து தங்கம் சென்று சாதனை படைத்த தங்கவேலு மாரியப்பனும் இந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.

பாரிஸ் மற்றும் பிரான்ஸில் நடைபெற்ற உலக பாராலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகம் முழுவதுமிலிருந்து 52 நாடுகள் பங்கேற்றன. அவர்களுடன் இந்தியா சார்பாக சுமார் 40 திறமையான மாற்றுத்திறன் கொண்டு இளைஞர்கள் பங்கேற்று 17வது இடத்தை பிடித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் மாநில தலைவர் Er.சந்திரசேகர் அவர்கள் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த தங்கவேலு மாரியப்பன் ஒலிம்பிக்கில் பங்கேற்று தடகளப் போட்டியில் தங்கம் வென்றார். இவரைப் போல கிராமப்புறங்களில் திறமையுள்ள வீரர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இல்லை. அவர்களை கண்டறிந்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்தி பங்கேற்க வைப்பதில் நாங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக வீரர், வீராங்கனைகள் கடும் பயிற்சியில் ஈடுபட்ட போட்டிகளில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில், தேசிய அளவில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களை கொண்டு விரிவான பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை உறுதி செய்வது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு பெருமையையும் கொண்டு வருவார்கள் என்பது சங்கத்தின் நம்பிக்கை என சங்கத் தலைவர் Er.சந்திரசேகர் அவர்கள் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், சீனாவில் நடைபெற உள்ள சர்வதேச பாராலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய விளையாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் மட்டங்களில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், இப்போது உலக அளவிலான போட்டிகளுக்கு உயர்ந்துள்ளது நம்பிக்கையைத் தூண்டுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த திறமையான வீரர்களின் பெயர்களை சாதனை புத்தகங்களில் இடம் பெற உறுதி செய்ய தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என Er. சந்திரசேகர் தெரிவித்தார்.

Views: - 302

0

0