வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக அறிவிப்பு : கோவையில் பல்வேறு இடங்களில் கால்கடுக்க காத்திருந்த வாக்காளர்கள் சாலை மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 6:35 pm
Vote PUblic Protest - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் வாக்களிக்க அவகாசம் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. கோவையில் இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர்.

இறுதியாக மூன்று மணி நிலவரம் வெளியிடப்பட்டது அதில் கோவை மாவட்டத்தில் மொத்தமாக 46.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும் என்றும், 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு வாக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்க்ளில் கோளாறு ஏற்பட்டதால் சிறுது நேரம் கால தாமதம் ஆனது.

வேலையில் புளியகுளம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு செய்வதற்கான அனுமதி முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் நீண்ட நேரம் நேரமாக கால்கடுக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் கோபம் அடைந்தனர். இந்த நிலையில் திடீரென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வாக்கு செலுத்த தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இதே போல், ராமநாதபுரம், ஒக்கிலிகர் காலனி, ஹெரைட்டி ஹால் சாலை ஆகிய பகுதிகளிலும் 5 மணிக்கு மேல் வந்த மக்களை அனுமதிக்காததால் சாலை மறியல் போராட்டம் நடைபெறறது

Views: - 681

0

0