மதுரையில் தவித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்… போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : பேருந்து குறைவால் அவதி!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 10:52 am
Madurai
Quick Share

மதுரையில் தவித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்… போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : பேருந்து குறைவால் அவதி!

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று அதிகாலை 12 மணி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, ஏஐசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தத்தால் 900ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது 90சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இரவு 12 மணி முதலே பேருந்து சேவை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு காரணமாக பொதுமக்களின் வருகையும் சற்று குறைவாகவே உள்ளது. பிற பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதுரையில் உள்ள 16 போக்குவரத்து பணிமனைகளில் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக போக்குவரத்து ஊழியர்கள் கூடியுள்ளனர். மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பாக போராட்டத்திற்காக ஒன்று கூடிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிமனையில் உள்ளே இருந்து பேருந்துகள் வெளியே வரவிடாமல் பேருந்தை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 180

0

0