தேர்தல் நடத்தை விதிகள் அமல்: திமுகவின் பேனர் விளம்பரங்களால் சலசலப்பு..

3 March 2021, 8:55 am
Quick Share

கோவை:தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கோவையில் திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர் விளம்பரங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன் காரணமாக பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூரில் உள்ள திமுக கிளை அலுவலகம் முன்பு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் இதுபோன்ற விதி மீறலில் ஈடுபட்டு வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 15

0

0