திமுக நிர்வாகியின் பண்ணை வீட்டில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் ; 2 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
25 November 2022, 10:41 am
Quick Share

கரூர் ; குளித்தலையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான தோட்ட வீட்டில் இருந்து 151 கிலோ புகையிலைப் பொருட்களை தனிப்படை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி அருகே போலீசார் வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த குளித்தலை கடம்பர் கோவில் தெற்கு மணவாள தெருவை சேர்ந்த சாகுல் அமீது மகன்கள் ஆசாத், சாதிக் அலி இருபது வாகனங்களை நிறுத்திய சோதனையிட்ட போது, அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரிய வந்தது.

மேலும், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் குளித்தலை பெரிய பாலம் அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோட்ட வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில் அவரிடமிருந்து 105 கிலோ ஹான்ஸ் பாக்கெட்களையும், 41 கிலோ கூல் லிப், விமல் பான் மசாலா பாக்கெட்டுகளையும், இருவரின் பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் இருவரையும் குளித்தலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

இதில் சாதிக் வழக்கறிஞர் படிப்பு படித்துள்ளார். புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் தோட்டத்து வீடு முன்னாள் குளித்தலை நகர மன்ற துணைத் தலைவரும், தற்போதைய திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஜாபருல்லா என்பவருக்கு சொந்தமான தோட்டம் என்பது தெரியவந்துள்ளது.

Views: - 442

0

0