திமுக பிரமுகர் விரட்டி விரட்டி வெட்டிக்கொலை…முன்விரோதம் காரணமா?: சென்னையில் பட்டப்பகலில் கொடூரம்..!!

Author: Rajesh
3 April 2022, 2:29 pm
Quick Share

சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியில் சவுந்தரராஜன் என்பவர் 59வது வட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் இவரது மேற்பார்வையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை தண்ணீர் பந்தலுக்கு தேவையான பொருட்களை கொண்டு வைத்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத கும்பலால் ஒன்று சவுந்தரராஜன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த இவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திமுகவை சேர்ந்த பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 845

0

0