திமுக எம்பி ஆர்எஸ் பாரதி மனு தள்ளுபடி : வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

27 February 2021, 12:36 pm
RS_Bharathi_DMK_Updatenews360
Quick Share

சென்னை : பட்டியலின மக்களை இழிவுபடுத்திய வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய திமுக எம்பி ஆர்எஸ் பாரதியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்பியுமான ஆர்எஸ் பாரதி, பட்டியலின மக்களை இழிவுபடுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆர்எஸ் பாரதியை மே 23-ம் தேதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர், உடல்நிலைக் காரணம் காட்டி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தன்மீது போலீசார் வேண்டுமென்றே இந்த வழக்கை போட்டிருப்பதாகவும், எனவே இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று ஆர்எஸ் பாரதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 30 பேரிடம் சாட்சியம் கேட்கப்பட்டிருப்பதாகவும், பொது மேடையில் பட்டியலின மக்களை இழிவு படுத்தி பேசியிருப்பதாகவும் கூறி வாதிடப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், போலீசாரின் அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்க முடியும் எனக் கூறி, ஆர்எஸ் பாரதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Views: - 8

0

0