சாலை விபத்தில் திமுக எம்பி மகன் பரிதாப பலி : புதுச்சேரிக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது மோதி விபத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 10:04 am
Dmk Mp son Dead - Updatenews360
Quick Share

விழுப்புரம் : கோட்டகுப்பம் அருகே சொகுசு காரை ஒட்டி வந்த திமுக எம்பி மகன் மடுப்பு சுவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னையை சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ. இவரது மகன் ராகேஷ் இவர் பணி நிமித்தமாக அவரது காரில் தனது நண்பருடன் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றார்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே வந்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி கார் உருகுலைந்தது. இதில் பயணம் செய்த திமுக எம்.பி.என்.ஆர் இளங்கோ மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவருடன் பயணித்த நண்பர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல் காரினுள் மாட்டிக்கொண்டதால் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மகாபலிபுரம் ஹோட்டலில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற போது குறுக்கே மாடு வந்ததால், மோதாமல் இருக்க திருப்பும் போது தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த திமுக எம்பி மகன் ராகேஷ்க்கு 21 வயதே ஆகிறது. திமுக எம்பி மகன் உயிரிழந்த செய்தியை அறிந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர்.

Views: - 422

0

0