தோட்டத்து வீட்டில் பெட்டி பெட்டியாக பதுக்கப்பட்ட ஹாட் பாக்ஸ்: முற்றுகையிட்ட அதிமுகவினர்…வசமாக மாட்டிய திமுகவினர்…!!

Author: Rajesh
15 February 2022, 12:57 pm
Quick Share

கோவை: கோவையில் ஹாபாக்ஸ் கொடுத்து திமுக.,வினர் வாக்கு கேட்டு வரும் சூழலில், ஹாட்பாக்ஸ் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தோட்டத்து வீட்டை அதிமுக.,வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை இராமநாதபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம், பகுதியில் ராஜேஷ் என்பவரது தோட்டம் உள்ளது. அங்கு பழைய பொருட்களை வைப்பதற்காக தகற கொட்டகை உள்ளது, இங்கு நேற்று இரவு வந்த திமுகவினர், பெட்டி பெட்டியாக, வாக்காளர்களுக்கு வழங்க ஹாட்பாக்ஸ்களை அடுக்கி வைத்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த அதிமுக.,வினர் இன்று அந்த தோட்டத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து இராமநாதபுரம் கிராம நிர்வாக அதிகாரி நிர்மலா, பறக்கும் படை மத்திய மண்டல தாசில்தார் வேல்முருகன், காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று அங்கு கூடியிருந்த அதிமுக.,வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் அந்த தகற கொட்டகைக்குள் என்ன உள்ளது, எனவும் அங்கு உள்ளே பெட்டி பெட்டியாக என்ன உள்ளது என்பதையும் காண்பித்தால் மட்டுமே கலைந்து செல்லுவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அனைவரின் மத்தியிலும் அந்த கொட்டகை பூட்டு உடைக்கப்பட்டது.

அப்போது அங்கு பெட்டி பெட்டியாக ஹாட் பாக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிமுக 62 வது வேட்பாளர், கலைவாணி வந்தார். அப்பொழுது தாசில்தார் நீங்கள் புகார் அளித்து உள்ளீர்கள், அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள பரிசு பொருட்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 818

0

0