தி.மு.க.வில் லியோனிக்கு முக்கியத்துவம் : போஸ்டரை கிழித்த ஐ.பெரியசாமி ஆதரவாளர்கள்!!

By: Udayachandran
2 October 2020, 6:11 pm
Dgl Leoni - updatenews360
Quick Share

திண்டுக்கல் : திமுகவில் புதிய கொள்கை பரப்பு செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனியின் போஸ்டரை திமுகவினர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஐ.லியோனி. இவர் பட்டிமன்ற நடுவராகவும்,திமுக மேடைப் பேச்சாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவருக்கு தலைமை கழகத்தில் இருந்து கொள்கை பரப்பு செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.

இன்று தலைமைக் கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்து, “தலைவர் தளபதியார் அவர்களுக்கும் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்“ தெரிவிப்பதாக ஐ.லியோனி படம் அடங்கிய போஸ்டர் திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்த திமுகவினர் திண்டுக்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் பழனி சட்டமன்ற தொகுதி ஐ.பி. செந்தில்குமார் படங்கள் மற்றும் பெயர்கள் இடம்பெறவில்லை என ஐ.லியோனி படத்தை கிழித்து போஸ்ட்டரை பிளேடால் அறுத்து கிழித்தனர்.

மேலும் போஸ்டரை கிழித்த திமுக மாணவர் அணிக்கு நன்றி என போஸ்டர் வலைதளங்களில் உலா வருடிகிறது- இதனால் திமுக மாவட்ட நிர்வாகிகளுக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது. தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Views: - 54

0

0