படிப்பு மட்டுமே வாழ்கை இல்லை என்பதை பள்ளிகள் கற்பிக்கின்றனவா..? : இயக்குனர் சேரன் கேள்வி..!

12 September 2020, 1:39 pm
Quick Share

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி துர்காவின் இழப்பு குறித்து இயக்குனர் சேரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 17ஆயிரத்து 990 மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில் பெற்றோர் தன் மீது வைத்த நம்பிக்கை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரின் இழப்பு தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குனர் சேரன் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை ‘படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி’ . மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0