சேர் போடறீங்களா? இல்ல கீழ உட்காரட்டா? வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் அலுவலருடன் அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 6:42 pm
ad
Quick Share

சேர் போடறீங்களா? இல்ல கீழ உட்காரட்டா? வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் அலுவலருடன் அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்.!!

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார்.

இதனையடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதிவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு மக்களவை தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தவும் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்களை செய்து வரும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராணி இன்று விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்வதற்க்காக வந்திருந்தார்.

அவருடன் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் குமரி பாராளுமன்ற வேட்பாளர் நசரேத் பசிலியான் உட்பட 5 பேர் வந்திருந்தனர்

அங்கு பணியில் இருந்த அலுவலர் ஒருவர் வெளியேற வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து அங்கிருந்து பாராளுமன்ற வேட்பாளர் நசரேத் பசிலியான் வெளியேறினார்.

இதனையடுத்து வேட்புமனுவை அதிகாரியிடம் சமர்பித்த அதிமுகவினர் வேட்பாளர் உட்பட கட்சி நிர்வாகிகள் அமர இருக்கைகள் இல்லையா என கேட்டுள்ளார்.

அதற்கு இங்கு அமர்ந்து பேச ஒன்றும் இல்லை என்று கூறினார். உடனே தளவாய் சுந்தரம் தங்களுக்கு இருக்கைகள் போடவில்லை எனில் கீழே அமர்ந்து விடுவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு கீழே அமர சென்றனர்.

இதனையடுத்து அவர்களுக்கு இருக்கைகள் தரப்பட்டது மேலும் அந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களை அங்கிருந்து வெளியே செல்ல கூறி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Views: - 485

0

0