வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம்… நீதிமன்றம் காட்டிய பச்சைக்கொடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2023, 6:26 pm
Venga -Updatenews360
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக, வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் 119 நபர்களின் மரபணு பரிசோதனைக்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது.

இதையடுத்து முதலாவதாக 11 பேரின் மரபணு பரிசோதனைக்கு, 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி வழங்கினார்கள். மற்ற 8 பேரும் முதலில் ரத்த மாதிரியை வழங்க மறுத்த நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி அவர்களது ரத்த மாதிரியும் பெறப்பட்டது.

தற்போது வரை இந்த வழக்கில் 21 பேரின் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராமங்களைச் சேர்ந்த 4 சிறுவர்களின் டிஎன்ஏ பரிசோதனைக்கு சிபிசிஐடி ஏற்கனவே அனுமதி கோரியிருந்தனர்.

இதையடுத்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜரான சிறுவர்களின் பெற்றோர்களில் ஒரு பெற்றோர் முதலில் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிறுவர்களை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்ற நீதிபதி, 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். டி.என்.ஏ. பரிசோதனைக்கான தேதி குறித்து, குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல ஆணைய தலைவர், காவல் நிலைய குழந்தைகள் நல குழு தலைவர் ஆகியோரிடம் ஆலோசித்து ஒரு குறிப்பிட்ட நாளில் 4 பேருக்கும் சேர்த்து பரிசோதனை நடத்தலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Views: - 264

0

0