ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தல்: வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

Author: Udhayakumar Raman
20 October 2021, 7:56 pm
Quick Share

புதுச்சேரி: புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயிலில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்த 3 வட மாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர்

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வட மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று புவனேஷ்வரில் இருந்து புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், மூட்டைகளை வைத்து இருந்த 3 பேரை பிடித்து சோதனை நடத்தியதில், தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 வட மாநிலத்தவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 270

0

0