‘ஆம்பள-னா சட்டைய கழட்டிட்டு நில்லுடா’… குடிபோதையில் காவலரை அசிங்கமாக திட்டிய நபர்… அதிர்ச்சி வீடியோ..!!
Author: Babu Lakshmanan24 ஜூன் 2023, 1:02 மணி
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் குடிபோதையில் காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தீபன். இவர் அப் பகுதியில் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக முதல் மனைவியை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பவானிசாகர் அரசு பள்ளியில் பயின்று வரும் தன்னுடைய முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக அதிக மது போதையில் பள்ளிக்கு சென்றுள்ளார்.
மது அருந்திவிட்டு வந்த இவரைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளியில் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தீபன், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார் இது குறித்து ஆசிரியர்கள் உடனடியாக பவானிசாகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவத்திற்கு வந்த காவலர்கள் சண்முகம் மற்றும் செல்லமுத்து ஆகியோர் ரகளை ஈடுபட்டுக் கொண்டிருந்த தீபனை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். இருப்பினும் அதிகம் அதிக மது போதையில் இருந்த தீபன் காவல்துறை அதிகாரி என்று கூட பார்க்காமல் மரியாதை இல்லாமல் தகாத வார்த்தையில் அவர்களையும் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீபனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு வந்து வாகனத்தை பெற்றுக் கொள்ளுமாறு எடுத்து வந்துள்ளனர். பின்னர், சுமார் 2 மணிநேரம் கழித்து மேலும் மது அருந்திவிட்டு காவல் நிலையத்துக்கு வந்த தீபன் காவல் நிலையத்திற்கு உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டு, அவர் கையில் எடுத்து வந்த மது பாட்டிலை உடைத்து, அவரது கழுத்திலும் வயிற்றுப் பகுதியிலும் கிழித்து சைக்கோ போல நடந்துள்ளார்.
பின்னர், அவரை மீட்ட பவானிசாகர் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரகளையில் ஈடுபட்ட தீபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.
தற்போது காவல்துறை அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியரை தீபன் சாலையில் நின்று கொண்டு தரக்குறைவாக தகாத வார்த்தையில் பேசும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1
0