நிவர் புயல் எதிரொலி : வங்கிகள் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு இன்று விடுமுறை!!

25 November 2020, 8:43 am
Bank Holiday - Updatenews360
Quick Share

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வங்கிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பாதுகாப்பு காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

Tamil Nadu, Andhra Pradesh & Puducherry ready to face Cyclone Nivar |  Chennai News - Times of India

மக்கள் பாதுகாக்க பேரிடர் மேலாண்மை குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நிலர் புயலானது சென்னை கடலுக்கு 380 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் இன்று பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது.

State to table NEET Ordinance in Assembly session - DTNext.in

இந்த நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

Views: - 16

0

0