மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு… ஒரு அடி இடத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அவலம்…!!

Author: Babu Lakshmanan
30 September 2022, 9:49 am
Quick Share

விருதுநகர் : வத்திராயிருப்பு அருகே போதுமான பாதை வசதி இல்லாததால், ஒரு அடி மட்டுமே உள்ள இடத்தில் இறந்தவர்களின உடலை கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலக் கோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது வ.மீனாட்சிபுரம். இங்குள்ள பொது மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லாததால், ஒரு அடி மட்டுமே உள்ள பாதையில் இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் சூழ்நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பு இந்த பொது மயானத்திற்கு 15 அடி பாதை வசதி இருந்தது என்றும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அந்த 15 அடி பாதையினை ஆக்கிரமித்து தற்போது ஒரு அடி மட்டுமே பாதை இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தாலும், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, பொது மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும், மயானத்தில் உள்ள எரியூட்டும் கொட்டகை மிகவும் சேதம் அடைந்து சிமெண்டுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகிறது.

ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக சேதமடைந்து கிடக்கும் எரியூட்டும் கொட்டகையினை அகற்றிவிட்டு புதிதாக கொட்டகை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி உள்ள பொதுமக்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.

Views: - 432

0

0