யூடியூப்பை பார்த்து தற்கொலை செய்த பொறியியல் மாணவர் : த்ரில் முடிவை தேடிக்கொண்ட த்ரில்லர் பாய்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2022, 12:22 pm
Thrill Suicide - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : யூடியூபில் வலியில்லாமல் தற்கொலை செய்வது கொள்வது எப்படி? தெரிந்து கொண்டு கூகுளில் லொக்கேஷன் தேடி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட எஞ்சினியரிங் மாணவனின் உடலை 3 நாட்களுக்கு பின் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த புத்தன்விளை பகுதியை சேர்ந்த ஹரிலால் மூர்த்தி மற்றும் பிந்து தம்பதியரின் மூத்த மகன் மிதுன். 21-வயதான இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு எஞ்சினியரிங் படித்து வருகிறார்.

தற்போது கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்தே ஆண் லைன் வகுப்பில் பயின்று வருகிறார். கடந்த 7-ம் தேதி காலை வீட்டில் இருந்து ஆன் லைன் தேர்வு எழுதிய மிதுன், தேர்வு விடை தாள்களை கோர்த்து கட்டுவதற்கு (டின் டேக்) நூல் வாங்கி வருவதாக தாயிடம் 100-ரூ வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். மாலை ஆகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் தாய் பிந்து திருவட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் மிதுன் மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அவர் வீட்டில் விட்டு சென்று தாயாரிடம் விசாரணை நடத்தியதோடு செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது கிடைத்த தகவல் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தது.

சிறு வயதில் ஆரம்ப பள்ளி படிப்பை வெளிநாட்டில் முடித்த மிதுன் கவிதை கட்டுரை அமானுசிய கதைகள் போன்றவற்றில் நாட்டமுடையவராக இருந்துள்ளார். இணையதளங்களில் த்ரில் மரணங்கள், வாழ்க்கையின் இருள் பக்கங்கள், த்ரில் தற்கொலைகள் அமானுசியங்கள் என தேடித்தேடி படிப்பதோடு அது சம்பந்தமாக கருத்துக்களையும் பதிவிடுவதோடு தன்னை ஒரு த்ரில்லர் கேரக்டராகவே பாவித்து வந்துள்ளார்.

தற்போது தனியறையில் தனிமையில் இணையத்தில் மூழ்கிய அவரை பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் செல்போனில் யூடியூப் பக்கத்தில் வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளவது எப்படி என்று பல வீடியோக்களை மிதுன் தேடி பார்த்ததோடு தன் ஊருக்கு அருகாமையிலேயே அதற்கு உகங்ந்த இடங்கள் எவை என கூகுளிலும் செர்ச் செய்து பார்த்துள்ளார். தனது பெண் தோழியிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ பிடிக்கவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் எந்த மாதிரி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார் எங்கு சென்று தற்கொலை செய்யப் போகிறார் என்ற விபரங்கள் தெரியாத நிலையில் போலீசார் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை கடந்த மூன்று நாட்களாக ஆய்வு செய்தனர்.

அப்போது தலையில் ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்லும் மிதுன் திருவட்டார் அழகியமண்டபம் வழியாக சுமார் 25-கிலோ மீட்டர் பயணித்து குளச்சல் கடற்கரை பகுதிக்கு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து 10-ம் தேதி குளச்சல் கடற்கரை பகுதியில் நின்ற இருசக்கர வாகனத்தை மீட்ட போலீசார் மிதுன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

இன்று காலை மீனவர்கள் உதவியுடன் படகில் குளச்சல் கடலுக்குள் சென்று பார்த்த போது தூண்டில் வளைவு கோர் லாக் கற்களுக்கிடையே சடலம் ஒன்று சிக்கியிருப்பதை கண்ட போலீசார் அந்த சடலத்தை கயிறு கட்டி மீட்டு அடையாளம் கண்ட போது அது மிதுன் உடல் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மிதுன் தற்கொலை செய்து கொண்டதை உறுதியாக்கிய போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவப் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மாயமான வழக்கை குளச்சல் காவல் நிலையத்திற்கு மாற்றிய நிலையில் குளச்சல் கடல் காவல் நிலைய போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் உன்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க எவரி மேன் பார் கிம்செல்ப் என்று மிதுன் சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே வெளியிட்டிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

த்ரில்லராக வலம் வந்த எஞ்சினியரிங் மாணவர் த்ரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1636

0

0