ஓபிஎஸ்க்கு எதிராக செக் வைத்த இபிஎஸ்… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2023, 9:23 pm
OPS EPS - Updatenews360
Quick Share

ஓபிஎஸ்க்கு எதிராக செக் வைத்த இபிஎஸ்… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?!!

சென்னை ஐகோர்ட்டில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- அ.தி.மு.க. பொது செயலாளர் என தன்னை ஐகோர்ட் கோர்ட், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தன்னை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன் அ.தி.மு.க.,வின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

எனவே அதிமுக பெயர் மற்றும் கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். எடப்பாடி பழனிசாமி மனு மீதான விசாரணை நாளை (செப்.21) நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

Views: - 104

0

0