3 வயது குழந்தைய பள்ளிக்கு அனுப்ப பயப்படுறாங்க.. தமிழகத்தின் தற்போதைய நிலை அப்படியிருக்கு ; கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு!

Author: Babu Lakshmanan
28 October 2023, 4:03 pm
Quick Share

பாலியல் வன்கொடுமை மூன்று வயது ஐந்து வயது குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு கூட அனுப்ப பயப்படுறாங்க என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கோவில்பட்டி மத்திய பகுதி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு கிராமம்,உள்ள 15 பூத்துக்கான முகவர்கள் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ முன்னிலையில் அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் அதிமுக நிர்வாகியிடம் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசியதாவது :- நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை துவக்கி வருகின்றன. மக்கள் இன்றைக்கு மாற்றத்திற்காக வந்துட்டாங்க. பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களால் மூன்று வயது, ஐந்து வயது குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு கூட அனுப்ப பயப்படுறாங்க, எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அம்பிகை பாலன், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் விஜி,கோபி, முருகன்,பழனி குமார்,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 190

0

0