கொலையில் முடிந்த குடும்ப ரகளை : அடிதடியில் முடிந்த சொத்துப் பிரச்சனை… சீரழிந்த குடும்பம்!!

Author: Babu Lakshmanan
6 August 2021, 7:12 pm
karur killed - updatenews360
Quick Share

குளித்தலை அருகே ஈச்சம்பட்டி பகுதியில் நிலப்பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட அடிதடி மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் சின்னயம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாநாயக்கர் (55). இவருக்கும் இவரின் சகோதரர் பொம்மாநாயக்கர் என்பவருக்கும் நிலப்பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று கிருஷ்ணாநாயக்கர் குடும்பத்தாருக்கும், பொம்மாநாயக்கர் குடும்பத்தாருக்கும் மீண்டும் நிலப்பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த கிருஷ்ணாநாயக்கரின் அக்கா கணவரும், மாமனாருமான காமாநாயக்கர் (75) தடுக்க முற்பட்டபோது அவரின் தலையில் தடியால் பின்புறத்தில் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். இதில் கிருஷ்ணாநாயக்கர் (65), இவரின் மகன் சின்னச்சாமி (27) ஆகிய இருவரும் இரத்தகாயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, திருச்சி அரசுமருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவஇடத்திற்கு சென்ற தோகைமலை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய பொம்மாநாயக்கர், பெருமாள், குமார், செல்லபாண்டியன், முத்துச்சாமி, பாலசுப்ரமணி, வேல்முருகன் ஆகிய 7 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 498

0

0