2வது திருமணம் செய்ய தேவயானி உட்பட 3 நடிகைகளை காதல் வலையில் வீழ்த்திய பிரபல ஹீரோ : கடைசியில் சிக்கிய பிரபல நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 4:09 pm
Sarath - Updatenews360
Quick Share

சினிமாத்துறையில் திருமணம் என்பது எப்படி வேண்டுமானாலும் மாறும். திருமணம் செய்யும் நட்சத்திர ஜோடி பிரிந்த கதைகளும் உண்டு. திருமணம் செய்யாமல் லிவ்விங் டூகெதர் வாழ்க்கைய வாழ்ந்து கசந்து போய் பிரிந்தவர்களும் உண்டு.

சினிமாவில் பிரியாமல் இன்னும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழ்ந்து வரும் ஜோடிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் முதல் திருமணம் செய்து கொண்டு இரண்டாவதாக சினிமா நடிகைகளை திருமணம் செய்த பிரபல நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அந்த வகையில் லிஸ்டில் சேர்ந்திருப்பவர் சுப்ரீம் ஹீரோ சரத்குமார். டெல்லியில் பிறந்தாலும் தாய் தந்தையர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான். பணி நிமித்தம் காரணமாக சரத்குமார் குடும்பம் டெல்லிக்கு சென்றது.

Moovendhar Part-3 Tamil Super Hit movie | R.Sarathkumar,Devayani,Manivannan  | Sirpy | Suraj

நடிப்பில் ஆர்வமுள்ள அவர், தனது உடம்பை கட்டுமஸ்தாக வைப்பதில் உறுதியாக இருந்தவர். படிப்பு எல்லாமே சென்னையில்தான், பாடிபில்டராக வலம் வந்த சரத்குமார் என்சிசியில் சேர்ந்தார். 1974ல் மிஸ்டர் மெட்ராஸ் ஆணழகன் போட்டியில் கலந்து வெற்றி பெற்றவர்.

பின்னர் பத்திரிகையாளராக பணிபுரிந்த அவர், கண்ணதாசனை சந்தித்த போது படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 1986ல் சின்னப்பூவே மெல்லப்பூவே பேசு படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் வில்லன் ரோல்களில் நடித்து வந்த இவர், பின்னர் கதாநாயகனாக உருவெடுத்தார். கதாநாயகனாக உருவெடுத்த பின் வாய்ப்புகள் குவிந்தது,. அவர் நடித்த படங்கள் ஹிட் அடித்தது.

1984ல்சாயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவருக்கு வரலட்சுமி சரத்குமார், பூஜா சரத்குமார் என்ற இரு பெண்கள் உள்ளன. இதையடுத்து 2000ம் ஆண்டு சாயாவை விவகாரத்து செய்த சரத்குமார், இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

தேவயானியை துரத்தி துரத்தி காதலித்த மூத்த நடிகர்.. கல்யாணமாகியும் விடாத  கொடுமை! - Cinemapettai

அந்த கட்டத்தில் சரத்குமார் சிறந்த கதாநாயகனாக வலம் வந்தார். தன்னுடன் நடித்த நடிகைகளுடன் கிசுகிசுக்கள் எழுந்தன. இருந்த போதிலும், தேவயானியுடன் அதிக படங்களில் நடித்ததால் அவருடன் சரத்குமாருக்கு காதல் ஏற்பட்டது. பின்னர் தேவயானியின் பெற்றோரிடம் நேராக பெண் கேட்க சென்றுள்ளார். ஆனால் தேவயானியின் தாயார், ஏற்கனவே திருமணமானதை காரணம் காட்டி நிராகரித்துள்ளார்.

பின்னர் நம்ம அண்ணாச்சி படத்தில் நடித்த போது, ஹீராவுடன் காதல் வயப்பட்டார் சரத். ஆனால் ஹீரா, சுப்ரீம் ஹீரோவுக்கு பை பை சொல்லிவிட்டார். ஆனால் சரத்குமார், அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

Dasarathan (1993) - IMDb

அப்போது நடிகை நக்மாவுடன் நடித்த போது இருவரும் காதல் வயப்பட்டனர். நக்மாவுக்காக நிறைய செலவுகள் செய்த சரத்குமார், ஒரு படம் முழுவதும் வெளிநாட்டிலேயே படப்பிடிப்பு நடத்தி தயாரித்து நடித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

Nagma And Her Controversial Love Life

நக்மாவுக்கும், சரத்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் செய்வதற்கு முன்பே பிரிந்து விட்டனர். இதையடுத்து கடும் பண நெருக்கடியில் தவித்த போது ராதிகாவுடனான நட்பு ஏற்பட்டது. ராதிகாவும் சரத்குமாருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.

Court orders arrest of Radhika and Sarathkumar! - Tamil News -  IndiaGlitz.com

நாளடைவில் இவர்கள் நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ராதிகாவும் சில கண்டிஷன்களை போட்டு சரத்குமாரை திருத்தியுள்ளார். 2001ம் ஆண்டு இந்த நட்சத்திர ஜோடி திருமணம் செய்தது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Views: - 700

3

1