‘எனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்’ : எஸ்.பி.பி.யின் மகன் சரணின் வீடியோ..!

17 August 2020, 5:47 pm
sb charan - updatenews360
Quick Share

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கு பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரையில் அனைத்து தரப்பு மக்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவிற்கு அகப்பட்டு வரும் திரையுலக நட்சத்திரங்களின் வரிசையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் இணைந்தார்.

இவர் கடந்த 5ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, சிகிச்சைக்கு பிறகு எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தனது தந்தையின் உடல்நிலை குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி. சரண் அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கூறியிருப்பதாவது :- எனது தந்தை உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, எனக் கூறியுள்ளார்.

Views: - 27

0

0