‘தென்னை வாரியம் கட்டாயம் வேண்டும்’: கோவையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!!

Author: Aarthi Sivakumar
18 October 2021, 1:54 pm
Quick Share

கோவை: தென்னை வாரியம் அமைக்க கோரி கோவையில் விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்னை உற்பத்தியையும், விவசாயிகளையும் மேம்படுத்த கடந்த 15 ஆண்டுகளாக தென்னை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை தென்னை வாரியம் அமைக்கப்படவில்லை இதனை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தென்னை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு. பழனிசாமி கூறியதாவது, கோவை மாவட்டத்தில் அதிகப்படியான விவசாயிகள் தென்னை உற்பத்தி மற்றும் தென்னை சார்ந்த தொழில்களை சார்ந்துள்ளனர்.

கோவையில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி நெகமம், சுல்தான்பேட்டை, பேரூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் திருப்பூர், உடுமலை போன்ற பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு மேல் விவசாயிகள் முழுநேர தொழிலாக தென்னை சாகுபடி செய்து வருகிறார்கள்.

தென்னை விவசாயிகள் பல இன்னல்களுக்கு உள்ளாகி வரும் சூழ்நிலையில் வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் தாக்குதல், கூன் வண்டு தாக்குதல், ஈயிரியோ பைட் நோய் மற்றும் வனவிலங்குகள் தாக்குதல், இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் தென்னை உற்பத்தி பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் மகசூல் குறைந்து விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை காரணம் காட்டி மேற்கண்ட தொழில் நிறுவனங்களை முடக்கி வருகிறார்கள். தென்னை உற்பத்தியையும், தென்னை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 481

0

0