வங்கியை முற்றுகையிட்டு பூட்டுபோட விவசாயிகள் முயற்சி… நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!!!

Author: Babu Lakshmanan
12 May 2023, 10:01 pm
Quick Share

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிட்டு பூட்டு போட முயற்சித்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்துள்ளனர்.

மத்திய அரசு பத்து லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகள் மற்றும் எண்ணற்ற நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், ஏழை, எளிய விவசாயிகள் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனை வசூல் செய்வதற்காக ஐ.ஓ.பி போன்ற வங்கிகள் பிரதமர் மோடி பென்ஷன் திட்டம், ஊனமுற்றோர் உதவித்தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை போன்றவற்றில் பிடித்தம் செய்த பின்னரே பணம் வழங்குகிறது.

இது போன்ற உதவித்தொகைகளில் கைவைக்கக் கூடாது என்று மத்திய நிதித்துறை கூறிய பிறகும் வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கண்டோன்மெண்ட் அருகே உள்ள ஐஓபி தலைமை அலுவலகத்தில் பூட்டு போடும் போராட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது. சுமார் 200க்கும் அதிகமான விவசாயிகள் ஐஓபி வாசல் முன்பாக நின்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வங்கி மேலாளரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கர தலைவர் அய்யாக்கண்ணு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு வங்கி மேலாளர் வராததால் வங்கிக்கு பூட்டு போட முயற்சித்தனர். வங்கி மேலாளரை கைது செய்ய கோரி கோசமிட்டனர். வங்கியை பூட்டு போட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Views: - 276

0

0