மகளுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த போட்டோகிராஃபர்… ரவுடியாக மாறிய பள்ளி மாணவியின் தந்தை.. பட்டப்பகலில் நடந்த சம்பவம்..!
Author: Babu Lakshmanan27 அக்டோபர் 2023, 4:39 மணி
வேடசந்தூர் அருகே மகளுடன் இருந்த காதலை கைவிட மறுத்த வாலிபரின் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவியின் தந்தையால் பெரும் பதற்றம் நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கே புதுப்பட்டி சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் வடமதுரையில் ரயில்நிலைய சாலையில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டுடியோவிற்கு புகைப்படம் எடுக்க வந்த வடமதுரை அருகே உள்ள ஒரு ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியுடன் அழகர்சாமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயமறிந்த மாணவியின் பெற்றோர் மாணவி, பள்ளி படிப்பை முடித்த பின்னர் அவரை கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்தனர். மேலும், தனது மகளுடனான காதலை கைவிடுமாறு மாணவியின் தந்தை அழகர்சாமியை தொடர்ந்து கண்டித்துள்ளார். ஆனாலும் அழகர்சாமி கோயம்புத்தூர் சென்று மாணவியை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். மேலும் மாணவியுடன் தான் எடுத்த படத்தை அவரின் தந்தைக்கு செல்போனில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை இன்று அழகர்சாமியின் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார். அப்போது, அழகர்சாமி வெளியே சென்று விட்டதாக ஸ்டுடியோவில் வேலை பார்த்த நபர் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை ஸ்டுடியோவில் இருந்த கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் தந்தையை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் ஸ்டுடியோவிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
0
0