வரும் பிப்.,7ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா : டிடிவி தினகரன் தகவல்!!

3 February 2021, 12:23 pm
ttv dinakaran - updatenews360
Quick Share

பெங்களூரூவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா வரும் 7ம் தேதி தமிழகம் வர இருப்பதாக அமமுக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : – ஒரு வார ஓய்வுக்கு பிறகு வருவார். கே.பி. முனுசாமி பதில் சொல்லி பதில் சொல்ல விரும்பவில்லை. யார் தவறு செய்தவர்கள் யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். சசிகலாவின் வருகை தமிழகத்தில் சிலருக்கு கெமிக்கல் ரியாக்சனை உருவாக்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுகவை தொடங்கினோம்.

அதிமுக சட்டம் பொதுச்செயலாளர் மறைந்தாலோ அல்லது செயல்படாத நிலையிலோ தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். பொதுச்செயலாளர் மட்டுமே பொதுக்குழு தேர்தலை நடத்த முடியும். பதவி வழங்கவும், நீக்கவும் கூடியவர் பொதுச்செயலாளர். பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் துணை பொதுச்செயலாளர் செய்ய வேண்டும். நீதிமன்றம் முடிவு செய்யும் வரை பொறுத்திருப்போம்.

நான்கு, ஐந்து பேர் கூடி அவர்களே பதவியை நீக்குவது வேடிக்கையாக உள்ளது. சனநாயக போராட்டம் சசிகலா தொடங்குவார், அதிமுக மீட்கும் போராட்டத்தை அமமுக செய்யும். திமுகவை ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற பரந்த மனப்பான்மை எங்களுக்கு உள்ளது. குறுகிய மனப்பான்மை இல்லை. தேர்தலுக்கு அமமுக தயராகி உள்ளது.

யார் என்ன என்ன பேசினார்கள் என்ன என்பதை சிரித்துக்கொண்டே பார்த்தோம். அவர்கள் அன்று என்ன பேசினார்கள் இன்று என்ன பேசினார்கள் என தெரியும்.
குட்டையை குழப்பி அம்மாவின் உண்மையான தொண்டர்களை குழப்ப உள்ளனர். எனக்கும், அவருக்கும் தகராறு எனக்கூறி அவர்கள் சந்தோஷப்பட்டும். சசிகலாவுடன் தொலைபேசியில் தான் பேசுகிறோம்.

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடம் போகலாம் என சசிகலா கூறினார். இவர்கள் தீடீரென தடை போட்டுள்ளனர். மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். தினகரனை யாரும் தனிமைப்டுத்தவில்லை. கொரானா கூட என்னை தனிமைப்படுத்தவில்லை. எங்களை குழப்ப நினைத்தவர்கள், அவர்கள் தான் குழம்பி போய் உள்ளனர்.

பாஜக சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா என்பதை பாஜகவிடம் தான் நீங்கள் தான் கேட்க வேண்டும். ஸ்லீப்பர் செல் அவர்கள் பணியை சரியாக செய்வார்கள்.

தலைகீழாக நின்றாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக என்கிற தீய சக்கியை ஆட்சிக்கு வருவதை அதிமுக தொண்டர்கள் அனுமதிக்க மாட்டோம். ஜெயலலிதா உண்மையான தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சியை கட்டாயம் அமைப்பார்கள். அதற்கு சசிகலாவின் பங்கு இருக்கும். நலமாக உள்ளேன் என அவரே தெரிவித்துள்ளார். இன்றைய நிலைமையில் அவர் போட்டியிட முடியாது. சட்ட வல்லனநர்களை கலந்து பேசி வருகிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0