போலீஸ்காரர் மனைவி மீது மோகம்… உல்லாசம் அனுபவிக்க அழைப்பு விடுத்த சக காவலர் : போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை முயற்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2022, 2:13 pm
Police Fight - Updatenews360
Quick Share

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கோவைப்புதூர் பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

முருகானந்தம் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் மகளுடன் கோவைப்புதூரில் உள்ள பட்டாலியன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். முருகானந்தம் வீட்டிற்கும் எதிர் வீட்டில் வசிக்கும் காவலர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், முருகானந்தம் தனது பணி நிமித்தமாக டெல்லி சென்றுள்ளார். அதே போல எதிர் வீட்டில் உள்ள ராமச்சந்திரன் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், முருகானந்தத்தின் மனைவியுடன் ராமச்சந்திரன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். தனிமையில் இருப்பதை அறிந்து நட்பை வளர்த்த ராமச்சந்திரன், சக காவலரின் மனைவி என்று பாராமல் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.

இருவரும் அவ்வப்போது திருமணத்தை மீறி உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முருகானந்தத்தின் மனைவி, குடும்ப சூழல் காரணமாக ராமச்சந்திரனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

ஆனால் ராமச்சந்திரன் தொடர்ந்து டார்ச்சர் செய்து தன்னுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். டார்ச்சரை தாங்க முடியாத முருகானந்தத்தின் மனைவி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ராமச்சந்திரனை கண்டித்து எச்சரித்துள்ளார் முருகானந்தம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இது குறித்து காவலர்களிடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் கிரிக்கெட் மட்டையை எடுத்து ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

மனைவியிடம் கள்ளதொடர்பு வைத்திருந்த காவலரை கிரிக்கெட் மட்டையால் வெளுத்து வாங்கிய சக காவலர்….

இதில் ராமச்சந்திரன் தப்பியோடிய போதும், விடாமல் துரத்தில் முருகானந்தம் பட்டாலியனில் உள்ள கேண்டீனில் வைத்து தாக்கியுள்ளார். சக காவலர்கள் தடுத்துள்ளனர். ஆனால் ராமச்சந்திரன் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதே போல முருகானந்தத்தின் மனைவியும் புகார் கொடுத்துள்ளார். அதில் ராமச்சந்திரனின் மனைவியும் நானும் தோழிகள். அவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், ராமச்சந்திரன் என்னிடம் தகாத முறையில் நடந்து டார்ச்சர் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறியுள்ளார்.

இதைடுயத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காவலர்களின் இந்த செயலால் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Views: - 443

0

0