தேர்தலுக்கும், தொற்று பரவலுக்கும் சம்மந்தம் இல்லை.. ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் பாதிப்பு : சுகாதாரத்துறை செயலர் விளக்கம்
Author: Babu Lakshmanan31 January 2022, 2:19 pm


சென்னை : தேர்தலுக்கு நோய் தொற்று பரவலுக்கும் சம்மந்தம் இல்லை. சமூக வலைதளத்தில் தவறான செய்திகளை பரவாமல், சரியான செய்திகளை பகிருங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் உள்ள கொ ரானா புற நோயாளி பிரிவில் ஆய்வு மேற்கொண்டார் சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது ;- கொரானா 2வது அலையில் அதிக ஆக்சிஜன் தேவை இருந்தது போன்ற நிலை தற்போது இல்லை. தேவையான அளவு ஆக்சிஜன் இருக்கிறது. 2000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவ மனையில் 121 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 65 பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 16 பேர் முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள். 40 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்.
நோய் தொற்று பொறுத்தவரை டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருந்தது. தற்போது குறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோய் தொற்று அதிகமாக உள்ளது. நோய் தொற்று பொறுத்தவரை 5% பேர் தான் மருத்துவமனை வருகிறார்கள். 95% பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் 80% ஒமிக்கிரான் பாதிப்பு இருந்தாலும், மீதம் உள்ளது டெல்டா பதிப்பே ஆகும்.
பொது இடங்களில் தளர்வுகள் அளித்த பின்னர் பொதுமக்கள் கூட்டமாக செல்லாதீர்கள். தேர்தலுக்கு நோய் பரவலுக்கும் சம்மந்தம் இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தால் தான் நோய் தொற்று அதிகரிக்கும். எனவே சமூக வலை தளங்களில் கவனமாக செய்திகளை பகிருங்கள். தவறான செய்திகளை பகிராதீர்கள். தமிழகத்தில் டெல்டா இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. நோய் பரவல் பற்றி மத்திய, மாநில அரசுகள், உலக சுகாதார நிறுவனம் தெளிவான கருத்துக்களை பதிடுவிடுன்றனர்.
தமிழகத்தில் காய்ச்சல் தொற்று குறைந்து வருகிறது, இந்த நிலையிலும் Online மாணவர்கள் படித்தால் பாதிக்கப்படுவார்கள். அவர்களது படிப்பு பாதிக்கப்படும் என்று குழந்தைகள் மன நல வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒருவேளை ஏதாவது ஒரு பள்ளியில் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் முறையில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது என உலக சுகாதார மையத்தில் பல நாடுகள் அறிவுறுத்திய நிலையில் தான், வல்லுநர்கள் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மனவர்களின் பாதுகாப்பை மாவட்ட கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்என உத்தரவு செய்யப்பட்டுள்ளது, எனக் கூறினார்.


0


2